349. "மோசடி தாத்தாவும் மோடி வித்தை பேரனும்' - ஜெ. சொன்ன கதை
ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறிய கதை:
இப்போது நடந்து வரும் வாரிசு சண்டையை பார்க்கும்போது எனக்கு கதை வடிவில்
உள்ள நாடகம் நனைவுக்கு வருகிறது. ஒரு பெரியவரை தேடி பேரன் வயதில் ஒருவர்
வந்தார். "தாத்தா என்னை ஞாபகம் இருக்கிறதா?' என்று கேட்டார். அவரை
உற்றுப்பார்த்த பெரியவர், "இல்லையே' என்றார். "பத்து வருடத்திற்கு முன்பு
நான் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டபோது நீங்கள் வேறொருவரிடம் இருந்து
பத்தாயிரம் ரூபாய் வாங்கி தந்தீர்கள். அதன் மூலம் என் வாழ்க்கைக்கு
விளக்கேற்றி வைத்தீர்கள்' என்றார் பேரன்."அப்படியா பேராண்டி. அது
வேறொருவருடைய பணம் தானே? அதற்காக இப்போது வந்து நன்றி சொல்ல வேண்டிய
அவசியம் இல்லையே' என்றார் தாத்தா. அதற்கு பேரனோ, "நான் அதற்காக வரவில்லை.
அதே போல் இன்னொரு தடவை என் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்க முடியுமா
என்று கேட்கத்தான் வந்தேன்' என்றார் பேரன். இவ்வாறு ஜெயலலிதா சொன்னார்.
<b>நன்றி: தினமலர்</b>
6 மறுமொழிகள்:
Test comment :)
*** Edited ***என்னிக்கு சுயமா சிந்திச்சு இருக்கானுங்க? எல்லாம் கட்டு அண்டு பேஸ்டுக்குதான் லாயக்கு!
திருத்த முடியாதுடா உங்களை!
//"நான் அதற்காக வரவில்லை. அதே போல் இன்னொரு தடவை என் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்க முடியுமா என்று கேட்கத்தான் வந்தேன்'என்றார் பேரன்.
//
:))))))))))
நல்ல தாத்தா,நல்ல பேரன்.தமிழ் நாடு புண்ணிய பூமிதான் சந்தேகமேயில்லை.
பாலா,
சாத்தான் வேதம் ஓதுகிறது .. சில நேரங்களில் சாத்தானும் வேதம் ஓதவேண்டிய சூழல் ஏற்ப்பட்டுவிடுகிறது என்று சொல்ல தோன்றுகிறது.. என்ன செய்ய.
வீ. எம்
Post a Comment